தடுப்பூசி தொடர்பாக யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

Scroll Down To Discover
Spread the love

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா நமது பொறுமையை சோதித்து வருகிறது.
கொரோனா 2-ஆவது அலை மோசமாக உள்ளது.தடுப்பூசி தொடர்பாக யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்.தடுப்பூசி பற்றிய விவரங்களை சரியான நபர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இலவச தடுப்பூசி திட்டம் இனி வரும் காலங்களிலும் தொடரும்.கொரோனா வைரஸை வீழ்த்துவதுதான் இந்தியாவின் தற்போதைய முன்னுரிமை பணியாகும்.