ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று உறுதி.!

Scroll Down To Discover
Spread the love

தமிழகம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், கேரளா உட்பட, 10 மாநிலங்களில், கொரோனா வைரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இது கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள செய்தியில்:- கொரோனா அறிகுறியுடன் மோகன் பகவத் நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த மார்ச் 7-ம் தேதியன்று மோகன் பகவத் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார். இவ்வாறு டுவிட்டரில் செய்தி வெளியாகியுள்ளது.