மீண்டும் பகுதிநேர ஊரடங்கு – அம்பானியின் மகன் கடும் எதிர்ப்பு

Scroll Down To Discover
Spread the love

மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருப்பதால் அங்கு பகுதி நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலதிபர் அனில் அம்பானியின் மூத்த மகன் 29 வயதாகும் அன்மோல் அம்பானி, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். பிரபலமான பிசினஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், ஊடக வெளிச்சம் தன் மீது படாத அளவுக்கு ஒதுங்கியே இருக்கக்கூடிய கூச்ச சுபாவம் கொண்டவர். தனது வழக்கமான சுபாவத்தை ஒதுக்கி வைத்து விட்டு, கொரோனாவை காரணம் காட்டி பிறக்கப்படும் ஊரடங்குக்கு எதிரான கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


“கொரோனா என்பது இன்றைய புதிய மத வழிபாட்டு முறை ஆகிவிட்டது. இது ஒரு சர்வதேச சதி. நடிகர், நடிகைகள் தங்களது நடிப்புத் தொழிலைத் தொடரலாம். கிரிக்கெட் வீரர்கள் இரவில் கூட தங்களது கிரிக்கெட் விளையாட்டை விளையாடலாம். அரசியல்வாதிகள், பெருவாரியான மக்கள் கூட்டத்தைக் கூட்டி பொதுக்கூட்டங்களை நடத்தலாம். ஆனால், தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில்களைச் செய்வதும், பணியாளர்கள் தங்களது வேலையைச் செய்வது மட்டும் கூடாதா?” என அவர் அதில் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், அரசின் ஊரடங்கு முயற்சியை ஒரு தீய நோக்கமுடைய திட்டம் என்றும் சாடி உள்ள அவர், இந்திய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு ஆய்வில், தொற்றுநோயைச் சமாளிக்க ஊரடங்கை அமல்படுத்துவதை விட, கோவிட் -19 சோதனையை அதிகப்படுத்துவதே அதிகமான நன்மையை ஏற்படுத்தும் என்றும், பொருளாதார ரீதியாகவும் இது மிகவும் சாத்தியமானது என்றும் கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.