கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்தி கொண்டார் பிரதமர் மோடி

Scroll Down To Discover
Spread the love

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது டோஸ் தடுப்பூசியை இன்று காலை செலுத்திக்கொண்டார்.கடந்த மார்ச் 1ம் தேதி முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 2வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அவசரகால தேவைக்காக கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது வரை 9 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக சுகாதார, முன்கள பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், தற்போது 3ம் கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு படிப்படியாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசியின் முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ்-க்கு கால இடைவெளியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை அவர் செலுத்தி கொண்டார். கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டு சில வாரங்கள் கழித்து 2வது டோஸ் எடுத்து கொள்ள வேண்டும்.

அதன்படி, பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 2வது டோசை இன்று செலுத்தி கொண்டார். கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கான வழிகளில், தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் ஒன்று. எனவே, தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

புதுச்சேரியை சேர்ந்த பி. நிவேதா மற்றும் பஞ்சாப்பின் நிஷா சர்மா ஆகிய இரு செவிலியர்கள் பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசியின் 2வது டோசை செலுத்துவதற்காக பணியமர்த்தப்பட்டு இருந்தனர். அவர்கள் முறைப்படி பிரதமருக்கு 2வது டோசை செலுத்தினர்.