உத்தரப்பிரதேசத்தில் போன் பேசி கொண்டே 2 கொரோனா தடுப்பூசி போட்ட நர்ஸ்.!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜனவரி மாதம் தொடங்கி கடந்த ஏப்ரல்1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 50 வயதான பெண் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியிலிருந்த நர்ஸ் போனில் பேசிக்கொண்டே 2 தடுப்பூசிகளை போட்டதால் அப்பெண் அதிர்ச்சியடைந்தார்.

இதுபற்றி அந்த பெண் நர்சிடம் கேட்டுள்ளார். அதற்கு மன்னிப்பு கோருவதற்கு பதிலாக அவரிடம் நர்ஸ் சண்டை போட்டுள்ளார். இதனையறிந்த பெண்ணின் உறவினர்கள் அமளியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. 2 முறை தடுப்பூசி போட்டதில் பெண்ணின் கையில் லேசான வீக்கம் ஏற்பட்டு உள்ளது. எனினும் வேறு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.இந்த விவகாரம் பற்றி முதன்மை சுகாதார மையத்தின் மூத்த டாக்டரிடம் விசாரணை மேற்கொள்ளும்படி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். அறிக்கை ஒன்றை அளிக்கும்படியும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

பொதுவாக முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திய சில வாரங்கள் கழித்தே 2வது தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பது விதிமுறை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.