மதுரை தல்லாகுளம் கருப்பணசாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை தல்லாகுளம் கருப்பணசாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை நடைபெற்றது.முன்னதாக கோயில் முன்பாக பட்டாச்சாரியர்கள், அனுக்ஞை, விஷ்வக்சேனர் பூஜை, கடஸ்தாபணம், மிருத்ஞ்ச கரணம், யாகபூஜைகள், பூர்ணாகுதி, வாஸ்துசாந்தி, பிரவேசபலி ஆகிய பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து, இன்று காலை யாகபூஜைகளும், கடங்கள் புறப்பட்டு வந்து கோயில் விமானத்தில் பட்டர்களால் புனித நீர் ஊற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கருப்பணசாமிக்கு மஹா அபிஷேகம், பூஜைகள், அன்னதானம் வழங்குதல் போன்றவைகள் நடைபெற்றன.

இதற்கான ஏற்பாடுகளை, மதுரை தல்லாகுளம் அருள்மிகு கருப்பணசாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் கோவில் நிர்வாகிகள் மணிகண்டன் , ஹரி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
செய்தி: Ravi Chandran