ரயில் நிலையத்தில் புகை பிடித்தால் அபராதம்..!

Scroll Down To Discover
Spread the love

டெல்லி-டேராடூன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்தது. இதுபற்றிய விசாரணையில், கழிவறை குப்பைத்தொட்டியில், சிகரெட்டை அணைக்காமல் வீசியதே காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து, இத்தகைய தீவிபத்துகளை தடுக்க ஒரு வார காலத்துக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ரயில்களில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்வது ரெயில்வே சட்டத்தின் 164-வது பிரிவின்படி குற்றமாகும். எனவே, அப்படி கொண்டு செல்பவர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையோ அல்லது ரூ.1,000 அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

அதுபோல், ரெயில்களிலோ, ரெயில் நிலைய வளாகங்களிலோ புகை பிடிப்பவர்கள் மீது ரயில்வே சட்டத்தின்கீழ் வழக்குிபதிவு செய்யப்படும், அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.