அவனியாபுரம் பகுதியில் பறக்கும் படையினர் சோதனையில் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் மருதுபாண்டியர் சிலை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சவுண்டம்மன் கோவில் பூக்கடை தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி மோகனசுந்தரி (வயது 46) மற்றும் நான்கு பேர் ஒரு காரில் வந்தனர்.

அவர்களை நிறுத்தி தேர்தல் சிறப்பு பறக்கும்படை சோதனை செய்ததில் சுமார் 4 லட்சத்து 25 ஆயிரம் பணம் சிக்கியது இதுகுறித்து ஆவணங்களை முறையாக கேட்டபோது ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் அலுவலர் முருகேஸ்வரியிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் நகைகள் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.