மே மாதம் அயோத்தியில், பிரமாண்ட மசூதி, மருத்துவமனை கட்டுமானப் பணி துவங்கம் என தகவல்.!

Scroll Down To Discover
Spread the love

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு, அயோத்தி ராமர் கோவில் வழக்கில், சன்னி வக்பு வாரியம் மசூதி கட்டுவதற்கு, உ.பி., அரசு, 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, சோஹாவல் மாவட்டம், தனிபுர் கிராமத்தில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வக்பு வாரியம், ‘இந்து – இஸ்லாம் கலாசார அறக் கட்டளை’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதன் செய்தி தொடர்பாளர் அத்தர் ஹூசேன் கூறியதாவது: ஒதுக்கப்பட்ட நிலத்தில், பிரமாண்ட மசூதி, மருத்துவமனை, அருங்காட்சியகம், கலாசார மையம் ஆகியவை அமைய உள்ளன. கட்டட வடிவமைப்பை, மூத்த கட்டடவியல் வல்லுனர், எஸ்.எம்.அக்தர் உருவாக்கியுள்ளார். அதில், சாலையை அகலப்படுத்துவது உட்பட, சில மாற்றங்களை செய்ய, அறக்கட்டளை உறுப்பினர் குழு கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது.

மசூதி வளாகத்தில், பசுமை பகுதி மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் ஏற்படுத்தப்பட உள்ளன. அடுத்த வாரம், அயோத்தி நகர நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு, வடிவமைப்பு வரைபடம் அனுப்பி வைக்கப்படும். ஒப்புதல் கிடைத்த உடன், வரும் மே மாதம், மருத்துவமனையின் கட்டுமான பணி துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.