இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற 13.50 லட்சம் ரூபாய் பறிமுதல் – பறக்கும் படையினர் நடவடிக்கை

Scroll Down To Discover
Spread the love

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துலெட்சுமி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த நபரிடம் சோதனை செய்த போது கணக்கில் காட்டப்படாத 13.50 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து பணம் வடக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம் குமார் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. பணத்தை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட நபர் தரும் பட்சத்தில் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம் குமார் தெரிவித்தார்.

செய்தி: Ravi Chandran