பிரதமர் மோடிக்கு சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில், சிறந்து விளங்கும் சர்வதேச தலைவருக்கான ‘செராவீக்’ விருது வழங்கி கவுரவிப்பு.!

Scroll Down To Discover
Spread the love

அமெரிக்காவில், செராவீக் எனப்படும், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான மாநாடு, கடந்த, 1ம் தேதி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக துவங்கியது.

நேற்று வரை நடந்த இந்த மாநாட்டில், ‘செராவீக் குளோபல் எனர்ஜி அண்டு என்விராய்ன்மென்ட் லீடர்ஷிப் அவார்ட்’ எனப்படும், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில், சிறந்து விளங்கும் சர்வதேச தலைவருக்கான விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு, நேற்று வழங்கி கவுரவிக்கப்பட்டது.
https://twitter.com/narendramodi/status/1367830351104466944?s=20
விருதை பெற்ற பின், பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களுமே, உலகிற்கு பெரிய சவால்களாக உள்ளன. கொள்கைகள் மற்றும் சட்டங்கள் வாயிலாக, இவற்றை எதிர்கொள்ள வேண்டும். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை, 2030ம் ஆண்டுக்குள், இந்தியா அடைந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.