அமெரிக்க நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் எம்.பி.க்கு முக்கிய பதவி.!

Scroll Down To Discover
Spread the love

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பி. பிரமிளா ஜெயபால் (வயது 55). ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் சென்னையில் பிறந்த தமிழ் பெண் ஆவார்.

அமெரிக்க காங்கிரஸில் மிகவும் முற்போக்காளராக பார்க்கப்படும் இவர், இந்தியாவில் சிஏஏ சட்டம் மற்றும் காஷ்மீரின் மீதான இந்திய நிலைப்பாடுகள் பலவற்றை எதிர்ப்பவராவார். 2016-இல் முதல்முறையாக பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அமெரிக்கர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில், நம்பிக்கை தடுப்பு, வணிக மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான துணைக்குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரமிளா ஜெயபால், இது தனக்கு கிடைத்துள்ள கவுரவம் என குறிப்பிட்டார்.