ராஜபாளையம் சொக்கர் கோயிலில் மாசி மகம் தெப்பத்திருவிழா உற்சாக கொண்டாட்டம்.!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், மாசி மகம் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.

முன்னதாக ராம்கோ குழுமத் தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. தினமும் மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மகம் தெப்பத்திருவிழா உற்சாகமாக நடைபெற்றது.

சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் பூரண சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் – மீனாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். தெப்பத்திருவிழா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ராம்கோ குழும நிர்வாகிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.