காரியாபட்டியில் ஆத்மா திட்ட விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வேளாண் கல்லூரிமாணவிகள் பங்கேற்பு .!

Scroll Down To Discover
Spread the love

காரியாபட்டியில் ஆத்மா திட்ட விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) மற்றும் விரிவாக்க சீரமைப்பு திட்டம் சார்பாக விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காரியாபட்டி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராணி தலைமை வகித்தார்.

வேளாண் அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். மதுரை விவசாய கல்லூரி இறுதியாண்டு மாணவியரின் ஊரக வேளாண்மை பணி அனுபவத்திட்டத்தின் கீழ் மாணவியர்கள் பருத்தி, பயறு, நிலக்கடலை மற்றும் திருந்திய நெல் சாகுபடி தொடர்பான வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகள் விதை நேர்த்தி செய்தல் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தல் இயற்கை உரங்களை பயன்படுத்து அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயி களுக்கு மாணவிகள் பயிற்சி கொடுத்தனர். பயிற்சி முகாமில் மாணவிகள் வித்யா அன்பு பாரதி நந்தினி தனசேகரி கவிதா வர்ணிஷா ஆகியோர் பங்கேற்றனர்.