சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்.!

Scroll Down To Discover
Spread the love

சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, தங்கமயில் ஜூவல்லரி லிமிட் மற்றும் சோழவந்தான் அரவிந்த் ஆரம்ப கண் பரிசோதனை மையம் இணைந்து சர்க்கரை நோயாளிக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

முகாமினை , சிஎஸ்ஐ தொடக்க பள்ளி தலைமையாசிரியர் ராபின்சன் செல்வகுமார் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். தங்கமயில் ஜுவல்லரி முதுநிலை மேலாளர் செல்வம் வரவேற்றார். மருத்துவ குழுவினர் 200 க்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, இதில் 30 நோயாளி களுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. முகாம் அமைப்பாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.