சட்டசபை தேர்தல் – மாநிலங்களில் மத்திய ஆயுத காவல் படையினர் குவிப்பு.!

Scroll Down To Discover
Spread the love

தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில், ஏப்ரல் – மே மாதங்களில், சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில், தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய உள்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:சட்டசபை தேர்தல்களை சந்திக்க இருக்கும் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு, சி.ஏ.பி.எப்., எனப்படும் மத்திய ஆயுத காவல் படையினர், 25 ஆயிரம் பேர் அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.அதிகபட்சமாக, மேற்கு வங்கத்திற்கு, 12 ஆயிரத்து, 500 வீரர்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.

தமிழகத்திற்கு, 4,500 வீரர்கள்; அசாமுக்கு, 4,000 வீரர்கள்; கேரளாவுக்கு, 3,000 வீரர்கள்; புதுச்சேரிக்கு, 1,000 வீரர்களும் அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.இவர்களைத்தவிர, 7,500 வீரர்கள், தயார் நிலையில் நிலைநிறுத்தப்பட உள்ளனர். தேவை ஏற்படும்போது, தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு, அவர்கள் அனுப்பிவைக்கப்படுவர்.தேர்தல் கமிஷனர்கள் நடத்திய முதற்கட்ட மதிப்பீடு அடிப்படையில், இந்த எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின், இந்த எண்ணிக்கை உயர்த்தப்படலாம்.இவ்வாறு, அவர் கூறினார்