விரைவில் நெசவாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்குறுதி.

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைச்சாமிபுரம், தெற்கு வைத்தியநாதபுரம், சிவகாமிபுரம் பகுதிகளில் 3 கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சொசைட்டி செயல்பட்டு வருகின்றன. இந்த மூன்று கூட்டுறவு சொசைட்டிக்கு மேலாண்மை அதிகாரி நியமனம் செய்து கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையில் எம்டி அதாவது மேலாண்மை அதிகாரிக்கு சொசைட்டி மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பதால் சொசைட்டி மூலம் ஊதியம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைத்தறி நெசவாளர்கள் கடந்த மூன்று தினங்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் இழந்து வாடும் நெசவுத் தொழிலாளர்கள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜியிடம் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட பால்வளத் துறை அமைச்சர் துறை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இருந்தபோதும் இன்று மூன்றாவது நாள் தொடர் வேலை நிறுத்தத்தில் நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தி: Ravi Chandran