அசாமில் பிரம்மபுத்ரா ஆற்றில் இந்தியாவின் மிக நீளமான பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார் – பிரதமர் மோடி

Scroll Down To Discover
Spread the love

அசாமில் துப்ரி-புல்பரி இடையே பிரம்மபுத்ரா ஆற்றின் மீது ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த ஆற்றுப்பாலம் 18 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைய உள்ளது. இந்தியாவின் மிக நீளமான சாலைப் பாலமான இதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வழியாக அடிக்கல் நாட்டினார்.


இதன் சில பகுதிகள் அசாமிலும், சில பகுதிகள் மேகாலயாவின் காரோ குன்றுகள் பகுதியிலும் உள்ளன. மேலும் இது வங்காள தேசத்தின் சர்வதேச எல்லையையொட்டி 11 கிலோமீட்டர் தொலைவில் அமைகிறது.

இந்த பாலம் கட்டப்பட்டால் பயண நேரம் சுமார் 5 மணி நேரம் வரை மிச்சமாகும். ஒரு மணி நேர பரிதாப படகு பயணத்தையும் தவிர்க்கலாம். தற்போது சிறிய ரக படகுகள் மட்டுமே ஆற்றை கடக்க பயன்படுத்தப்படுகின்றன. ஜப்பான் நிறுவனம் இந்த திட்டத்திற்கு நிதிஉதவி அளிக்க சம்மதித்துள்ளது. எல் அண்ட் டி நிறுவனம், ரூ.3 ஆயிரத்து 166 கோடி மதிப்பில், 4 வழி பயணப் பாலத்தை அமைத்து தர ஒப்பந்தம் பெற்றறுள்ளது.