சர்வதேச தலைமை பதவியை வகிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது – பிரதமர் மோடி

Scroll Down To Discover
Spread the love

நாஸ்காம் தொழில்நுட்பம் மற்றும் தலைமை அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசியதாவது: ஜனநாயகத்திற்கு சிறந்த நிர்வாகம் தேவை.

மத்திய அரசை இந்திய மக்கள் நம்புகின்றனர். அரசின் சேவையை மக்களுக்கு கிடைக்க செய்துள்ளோம். முந்தைய காலத்தில் அரசின் கொள்முதல் குறித்து பல கேள்விகள் இருந்தன. தற்போது தொழில்நுட்பம் காரணமாக அனைத்திலும் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது. அரசின் டெண்டர்கள் ஆன்லைன் மூலம் விடப்படுகிறது.
https://twitter.com/narendramodi/status/1361936556974477314?s=20
உலக நாடுகளுக்கு, மைய மேடையாக இந்திய தொழில்நுட்பம் மாறியுள்ளது. இந்திய தொழில்நுட்ப தலைமைப்பண்பு இன்னும் பல மடங்கு வளர வேண்டியுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளும், புது திட்டங்களும் இந்தியாவின் ஐடி துறைக்கு தேவைப்படுகிறது. இந்தியா சுதந்திரம் பெற்றதன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறோம். புதிய இலக்குகளை நிர்ணயித்து அதனை நாம் அடைய வேண்டும். சுதந்திரம் பெற்றதன் 100வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடும் போது, இந்தியா உலகத்திற்கு தலைமை வகிக்க வேண்டும். நமது தொழில்நுட்பம் உலகை ஆள வேண்டும்.

இந்தியாவின் எதிர்காலத்திற்கு தொழில்நுட்பதுறை முக்கிய பங்காற்ற வேண்டும். செயற்கை நுண்ணறிவு, விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அவர்களின் வாழ்க்கை தரத்தை மாற்ற வேண்டும். கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் புதிய வாய்ப்புகளும் தீர்வுகளும் தேவைப்படுகிறது. சர்வதேச தலைமை பதவியை வகிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.