இந்தியா – அமெரிக்கா ராணுவங்கள் இணைந்து நடத்தும் 16-வது கூட்டு ராணுவ பயிற்சி .!

Scroll Down To Discover
Spread the love

இந்தியா மற்றும் அமெரிக்காவின் ராணுவங்கள் இணைந்து அடிக்கடி போர் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் 16-வது கூட்டு ராணுவ பயிற்சி ராஜஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மகாஜன் களத்தில் நேற்று தொடங்கியது. வருகிற 21-ந் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில் இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் இரு நாடுகளின் ஹெலிகாப்டர்கள், போர் தளவாடங்கள் என பெரும் ஆயுதங்களும் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பயிற்சியின்போது, இருதரப்பு உத்திகள், கருத்துகள், சிறந்த பயிற்சிகள் இருநாட்டு வீரர்களுக்கு இடையே பகிரப்படும்.


குறிப்பாக பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இரு நாட்டு ராணுவங்களின் பரந்த அனுபவங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். மேலும் மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் குறித்த அனுபவங்களும் இரு தரப்பும் பரிமாறிக்கொள்வார்கள்.

இந்த பயிற்சிக்காக வந்துள்ள அமெரிக்க ராணுவ வீரர்களை இந்திய ராணுவத்தின் 170-வது படைப்பிரிவு பிரிகேடியர் முகேஷ் பன்வாலா வரவேற்றார்.முன்னதாக பிரெஞ்சு ராணுவத்துடன் கடந்த மாதத்தில் 5 நாட்கள் இந்திய வீரர்கள் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.