கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கான பூமி பூஜை.!

Scroll Down To Discover
Spread the love

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் தமிழக தொல்லியல் துறையைச் சார்ந்த அலுவலர்கள் உள்ளூர் மக்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 6ஆம் கட்டமாக நடைபெற்ற அகழாய்வுப் பணியின் போது கீழடி மட்டுமன்றி அதன் அருகே உள்ள கொந்தகை மணலூர் அகரம் ஆகிய பகுதிகளிலும் பணிகள் நடைபெற்றன கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஆறாம் கட்ட அகழாய்வு நிறைவுற்றது.

இந்நிலையில் அப்பகுதியில் ஏழாம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல்துறை அனுமதி வழங்கியிருந்த நிலையில், மீண்டும் கீழடி கொந்தகை அகரம் மணலூர் பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளில் ஈடுபடும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கிடையே இன்று கொந்தகை அகழாய்வு பணிகளுக்கான பூமி பூஜையும் சுத்தப்படுத்தும் பணிகளும் தொடங்கின.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் கீழடி 7ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைக்க உள்ள நிலையில் இன்று பூமி பூஜை நடைபெற்றுள்ளது இதில் தமிழக தொல்லியல்துறை சார்ந்த அலுவலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

செய்தி: Ravi Chandran