சாதுர்யமாக செயல்பட்டு விபத்தைதவிர்த்த ரயில் ஓட்டுநருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது.!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் ‘அண்ணா’ விருதுடன் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான அண்ணா விருது பெற பலரும் விண்ணப்பித்தனர். இதில், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த விரைவு ரயில் ஓட்டுநரான சுரேஷ் என்பவர், இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளார்.

மதுரையில் இருந்து, சென்னை எழும்பூருக்கு, 2020 நவ.,18ல், வைகை எக்ஸ்பிரஸ் சென்றது. மதுரை, திருமங்கலத்தை அடுத்த, திருப்பதி பாலாஜி நகரைச் சேர்ந்த சுரேஷ், 45, ரயிலை ஓட்டினார்.ரயில் கொடைக்கானல் ரோடு — அம்பாத்துரை இடையே சென்றபோது, நிலச்சரிவால் பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன.

இதைக் கவனித்த, ரயில் ஓட்டுனர் சாமார்த்தியமாக செயல்பட்டு, துரிதமாக, ‘பிரேக்’ போட்டு, ரயிலை நிறுத்தியதால், விபத்தில் இருந்து தப்பியது. பயணம் செய்த, 1,500 பேர் உயிர் தப்பினர்.ஓட்டுனரின் துரித செயல்பாட்டை பாராட்டி, அவருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா விருது வழங்க வேண்டும் என, தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, ரயில் ஓட்டுனர் சுரேஷுக்கு, நாளை சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில், வீரதீர செயலுக்கான அண்ணா விருதை வழங்கி, முதல்வர் இ.பி.எஸ்., பாராட்ட உள்ளார்.