ஜெனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ; சிறுவர் சிறுமியர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.!

Scroll Down To Discover
Spread the love

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி இன்று காலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது இவ்விழாவை முன்னிட்டு திருப்பணி குழு தலைவர் பதஞ்சலி சுப்பிரமணிய செட்டியார் கௌரவத் தலைவர் மாணிக்கம் எம்எல்ஏ கொரியர் கணேசன் செயல் அலுவலர்கள் இளஞ்செழியன் இளமதி துணைத் தலைவர்கள் மணி என்ற முத்தையா முருகேசன் பால்பாண்டி ஆகியோர் முன்னிலையில் அர்ச்சகர் சண்முகவேல் யானை மீதேறி தீர்த்தத்தை எடுத்து வந்தார் .

இவரைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் தீர்த்தக்குடம் வைகை ஆற்றிலிருந்து எடுத்து நான்கு ரத வீதி வலம் வந்து கோவிலை வந்தடைந்தனர் பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது சிறப்பு பூஜைகள் நடந்து அன்னதானம் வழங்கினார்கள்