தேவேந்திரகுல வேளாளர்களை மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தன்னெழுச்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இப்போராட்டத்தில்

தேவேந்திர குல வேளாளர்கள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றம் ஏழு உட்பிரிவுகள் ஒன்றிணைத்து மத்திய மாநில அரசு அரசாணை வெளியிட கோரியும், மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்டவும், வீரன் சுந்தரலிங்கனார் சிலையை மதுரை விமான நிலையம் முன்பாக நிறுவ கோரியும் உட்பட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தன்னெழுச்சி போராட்டக் குழுகோழிமேடு பாஸ்கரன் & ராஜா சமயநல்லூர் பிரபு சுங்குராம்பட்டி சுந்தரமூர்த்தி சிலையநெரி பாண்டி அவனியாபுரம் ராஜா திருப்பரங்குன்றம் பழனிவேல் மானகிரி பேரரசு மணி செல்லூர் விஜய் செல்லூர் ராஜா ராம் மதிச்சியம் நவீன் பழங்காநத்தம் முருகன், போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கு வழிகாட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவர் ரா. மூர்த்தி, காங்கிரஸ் மதுரை மாவட்ட தலைவர் சங்கரபாண்டி, வழக்கறிஞர் இளஞ்செழியன் மூவேந்தர் புலிப்படை நிறுவனத்தலைவர் பாஸ்கர் மற்றும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மானகிரி சரத் அவர்கள் தலைமை ஏற்றார், அரசியல் அதிகாரம் அமைப்பு டாக்டர் சேவியர் தமிழர் விடுதலைக் கழகம் வழக்கறிஞர் ராஜ்குமார், மள்ளர் நாடு செயல் தலைவர் சோலை பழனிவேல்ராஜன், மருத நாட்டு மக்கள் கட்சி பனை ராஜ்குமார், தமிழர் தேசிய கழகம் வையவன், மள்ளர் பேராயம் சுபாஷினி மள்ளத்தி, தமிழர் மீட்பு கழகம் கரிகால பாண்டியன், ஆன்மீக பேரவை ராஜா தேவேந்திரன், கரூர் மள்ளர் சுவாமிநாதன், தேவேந்திரகுல உறவின்முறை புதூர் ஜெரோம், நாமக்கல் அகில இந்திய தேவேந்திரகுல மக்கள் எழுச்சி பேரவை ரகோதர பாண்டியன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் மேலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் 500க்கும் மேற்பட்ட பெண்கள் வழக்கறிஞர்கள் தொழில் நுட்ப வல்லுனர்கள் தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.