இந்திய விமானப்படை நடத்திய பாலக்கோட் தாக்குதலில் 300 பேர் பலி – முதல் முறையாக பாகிஸ்தான் ஒப்புதல்

Scroll Down To Discover
Spread the love

ஜம்மு – காஷ்மீரில் உள்ள புல்வாமாவில், 2019ல், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படையின் விமானங்கள், பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தின. இதில், பலர் இறந்ததாக, இந்திய விமானப்படை தெரிவித்தது.பாகிஸ்தான் ராணுவமும், அரசும், இந்த தகவலை தொடர்ந்து மறுத்து வந்தன.

‘இந்த தாக்குதலில் ஒருவர் கூட பலியாகவில்லை; வெறும் மணல் பகுதியில் தான், இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திச் சென்றது’ என, தொடர்ந்து கூறி வந்தன. பாகிஸ்தான் அரசு கூறியதை, இந்தியாவில் உள்ள சில எதிர்க்கட்சி தலைவர்களும் ஆமோதித்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் துாதரக அதிகாரி ஆஹா ஹிலாலே, பாகிஸ்தானின்,’டிவி’ சேனல் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் எப்போதும், பாகிஸ்தான்ராணுவத்தை ஆதரித்து பேசுவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சியில் பாலகோட்டில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் பற்றி அவர் கூறியதாவது: இந்திய விமானப்படை தாக்குதலில், 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். யாரும் பலியாகவில்லை என, அப்போது கூறியது பொய். எல்லையில் நிலைமை மோசமாகி விடக் கூடாது என்பதற்காக அப்படி சொல்லப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.