நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை அனுசரிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஓர் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 23-ஆம் தேதி தொடங்கி ஒரு வருடம் வரை நடைபெறக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து இந்த குழு முடிவு செய்யும். மேன்மைமிகு குடிமக்கள், வரலாற்று அறிஞர்கள், எழுத்தாளர்கள், வல்லுநர்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருடன் இந்திய தேசிய ராணுவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் ஆகியோர் இந்த குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். தில்லி, கொல்கத்தா உட்பட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நேதாஜி, இந்திய தேசிய ராணுவத்துடன் தொடர்புடைய பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடைபெறுவது தொடர்பாக இந்தக்குழு ஆலோசனைகளை வழங்கும்.
உயர்மட்ட குழு குறித்த அரசாணை அறிவிக்கையைக் காண இங்கே கிளிக் செய்யவும்
http://egazette.nic.in/WriteReadData/2021/224300.pdf

														
														
														
Leave your comments here...