தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது – சத்குரு ஜக்கி வாசுதேவ்.

Scroll Down To Discover
Spread the love

தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியில் உள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம், சேதப்படுத்தப்படுகிறது. பக்தர்களால் ஆலயங்கள் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


அத்துடன், பிரதமர் மோடி அலுவலகம், தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் நடிகர் ரஜினி காந்த் அவர்களின் டுவிட்டர் பக்கங்களுக்கு டேக் செய்துள்ளார்.