குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்:நடிகர் ரஜினிகாந்த்

Scroll Down To Discover
Spread the love

சென்னை போயஸ்கார்டனிலுள்ள தனது இல்லம் முன்பு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தம்மை காண்பதற்காக திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்து அவர் வாழ்த்து தெரிவித்தார். அனைவரது இதயங்களிலும், வாழ்கையிலும் இந்த தீபாவளி வெளிச்சத்தை கொண்டுவர வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி:-
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் பற்றிய கேள்விக்கு அவர், அந்த குழந்தை உயிருடன், நலமுடன் மீண்டு வரவேண்டும் என்று அந்த ஆண்டவனை பிரார்த்தித்து கொள்கிறேன்.  இதுபோன்ற விவகாரங்களில், பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  அவர்கள் நிறைய விசயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். பின்னர் நீண்டநேர போராட்டத்திற்கு பின்பும் அரசால் குழந்தை மீட்கப்படாதது பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அரசு முயற்சி செய்து வருகிறது.  முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறப்புடன் இருக்கும்.  விடாமுயற்சியுடன் மீட்பு பணியில் அரசு ஈடுபட்டு வருகின்றது.  அவர்களை குறை கூற முடியாது என்று கூறினார். கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றை மூடியிருக்க வேண்டும்.  குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.