கரும்பு விவசாயிகளுக்கு கடனுதவி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.!

Scroll Down To Discover
Spread the love

கரும்பு விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார். அதில், கரும்பு விவசாயிகளுக்கு தேவையான கடன் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டிருக்கிறார். கடன் நிலுவையில் இருந்தாலும் விவசாயிகளுக்கு மேலும் கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும், மத்திய நிதியமைச்சருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மேலும் 4 லட்சம் கரும்பு விவசாயிகளை பாதுகாக்க தனிகவனம் செலுத்துமாறும், நிர்மலா சீதாராமனுக்கு, முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 34,000 ஹெக்டேர் பரப்பில் கரும்பு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன வசதி ஏற்படுத்த 68 கோடியே 35 லட்ச ரூபாய் மானியம் தரப்படுகிறது என்றும், அரசு மற்றும் வங்கி நிர்வாகிகளை உறுப்பினர்களாக கொண்டு சர்க்கரை ஆலை சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதையும், முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2018-19ஆம் ஆண்டில் கரும்பு மெட்ரிக் டன் ஒன்றிற்கு 137 ரூபாய் 50 காசுகள் வீதம், 200 கோடி ரூபாய் அளவிற்கு, கரும்பு விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.