சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.31 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.!

Scroll Down To Discover
Spread the love

சென்னை ரூ. 31.87 இலட்சம் மதிப்பில் 621 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல்

துபாயில் இருந்து ஏர் இந்தியா IX 1644 விமானத்தில் சென்னை வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஜஹபர் அலி அப்துல் வகாப் (49) மற்றும் சென்னையைச் சேர்ந்த தமீம் அன்சாரி சம்சுதீன் (28) ஆகியோரை விமான நிலைய சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பெயரில் தடுத்து நிறுத்தினர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 733 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய இரண்டு பொட்டலங்கள் அவர்களது உள்ளாடையினுள் மறைத்து தைத்திருப்பது தெரியவந்தது.


அவர்கள் இருவரிடமிருந்தும் ரூ. 31.87 இலட்சம் மதிப்பில் 621 கிராம் தங்கம், சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.