ஓட்டுநர் அருகில் உட்காரும் பயணி இருக்கைக்கும் “ஏர்பேக்” அமைப்பதை கட்டாயமாக்குவது பற்றி பொதுமக்கள் கருத்துக் கேட்பு..!

Scroll Down To Discover
Spread the love

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஓட்டுனருக்கு அருகில் முன் இருக்கையில் அமரும் பயணிக்கும் காற்றுப்பை வசதி அளிப்பதை கட்டாயமாக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

நிறைய கார்களிலும் ஓட்டுநர் சீட்டிற்கு மட்டுமே ஏர்பேக் இருக்கும். சில விலைமதிப்புள்ள கார்களில் ஓட்டுநர் சீட் மட்டுமின்றி முன்பக்க சீட்டிலும் ஏர்பேக் இருக்கும். இந்நிலையில் காரின் முன்பக்கத்தில் ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்திருக்கும் பயணியின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் அனைத்து வகை கார்களிலும் இரண்டு ஏர்பேக்குகள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

புதிய ரக வாகனங்களுக்கு 2021 ஏப்ரல் 1-ஆம் தேதி முதலும், தற்போது உள்ள ரகங்களுக்கு 2021 ஜூன் 1-ஆம் தேதி முதலும் இந்த திட்டத்தை செயல்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை டிசம்பர் 28-ஆம் தேதி, அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 30 நாட்களில் இதுதொடர்பான பங்குதாரர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களையும் பின்னூட்டங்களையும் comments-morth@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.