அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பணம் கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை

Scroll Down To Discover
Spread the love

மதுரை எல்லீஸ்நகர் அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது இதில் விடுமுறை காலங்களில் அதிக அளவில் வசூல் ஆகும்.

மேலும் , கிறிஸ்மஸ் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட்ட நிலையில், சனி மற்றும் ஞாயிறு இரு நாட்களும் வங்கி விடுமுறை என்பதால் எல்லீஸ்நகர் போக்குவரத்து பணிமனையில் வசூலான பணத்தை லாக்கரில் வைத்து சென்றுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை வங்கியில் பணம் செலுத்துவதற்காக லாக்கரை திறக்கும் பொழுது பணம் ரூ.15 லட்சம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மேலாளர் மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டதாக தெரியவந்தது. பணிமனை மேலாளர் ராஜசேகர் எஸ் எஸ் காலனி போலீசாரிடம் புகார் புகார் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் சந்தேகத்தின் பெயரில், பாண்டியராஜன், செல்வம் , சென்ராயன் ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.