முடி திருத்தும் தொழிலாளியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரையில் போராட்டம்..!

Scroll Down To Discover
Spread the love

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அருகிலுள்ள உலக்குடி கிராமத்தில் 3 மாதத்திற்கு முன்பு அதே கிராமத்தில் வசிக்கும் முடி திருத்தும் தொழிலாளி ராஜா என்பவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி திருத்தும் பணி செய்தற்காக மற்றொரு பிரிவை சேர்ந்த தென்னரசு மற்றும் அவரது மனைவியும் ஊராட்சி மன்ற தலைவருமான ராஜம்மாள் உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து ராஜாவை குடும்பத்துடன் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் ராஜா குடும்பத்துடன் வனப்பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் நடைபெற்று 3 மாதங்கள் ஆகியும் புகார் குறித்து காவல்துறை உரிய நடவடிக்கைகள் எடுக்காததை கண்டித்து, மருத்துவர் சமூக நலச்சங்கம் சார்பில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது, கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். செயலாளர் வேலாயுதம், பொருளாளர் பாக்கியம், மாநகர் இளைஞரணி நிர்வாகி பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.