ஊரடங்கு தளர்வு : திருமலை நாயக்கர் மகால், கீழடி கண்காட்சிகள் இன்று முதல் திறப்பு.!

Scroll Down To Discover
Spread the love

மதுரையில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் இன்று முதல் திருமலை நாயக்கர் மஹால் மற்றும் உலக தமிழ் சங்க வளாகம் கீழடி கண்காட்சி மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை திருமலை நாயக்கர் மஹால் வழக்கம் போல் காலை 9 மணி முதல் 5 மணி வரை திறந்திருக்கும். மாலை 6.30 மணிக்கு ஒளி வழி காட்டிகள் நடக்கும். அதே போல உலகத் தமிழ்ச் சங்க கீழடி கண்காட்சி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

கண்காட்சிகளை காண வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தபின் சமூக இடைவெளியை பின்பற்றி கண்காட்சியை பார்வையிடலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்