மின்சாரத்துறையில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான இந்திய, அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.!

Scroll Down To Discover
Spread the love

மின்சாரத்துறையில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான இந்திய, அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை, இந்தியாவும், அமெரிக்காவும், மின்சாரத்துறையில் இருதரப்பு நலன் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம், இந்தியாவின் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையமும், அமெரிக்காவின் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள்.

மொத்த விலை மின்சார சந்தையை ஊக்குவிப்பதற்காகவும், மின்சார தொகுப்பின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காகவுமான ஒழுங்குமுறை மற்றும் கொள்கைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமில்லாமல், வளர்ச்சித் திட்டங்கள், பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.