குருவாயூர் கோயிலில் 46 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி – பக்தர்கள் தரிசனத்திற்கு தடை

Scroll Down To Discover
Spread the love

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கேரளாவில் உள்ள சபரிமலை, குருவாயூர் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள், தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், சபரிமலை மற்றும் குருவாயூர் கோயில்களில் ஊழியர்களுக்கு தொற்று பரவுவது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குருவாயூர் கோயில் ஊழியர்கள் அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் என 46 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது.

இதனையடுத்து குருவாயூர் கோயில் உள்ள பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு, அனுமதி வழங்கப்படாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.