இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட உலகின் முதல் விண்வெளி சார்ந்த இணைய அடிப்படையிலான சேவை : பிஎஸ்என்எல் நிறுவனம்

Scroll Down To Discover
Spread the love

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையான டிஜிட்டல் இந்தியாவை, மீனவர்கள், விவசாயிகள், கட்டுமானப் பணியாளர்கள் ஆகியோரிடமிருந்து தொடங்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஸ்கைலோடெக் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து உலகில் முதன்முறையாக விண்வெளி சார்ந்த இணைய அடிப்படையிலான சேவையைத் துவக்க உள்ளது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பமானது, இந்திய கடல் பகுதிகள், காஷ்மீரின் லடாக் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத் முதல் வடக்கு கிழக்கு மாகாணங்கள் வரையிலும் இந்திய எல்லைக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தனது சேவையை வழங்கும்.

இந்த சேவை குறித்து கருத்து தெரிவித்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான பி கே பர்வார், புதுமையான மற்றும் குறைந்த செலவில் தொலைத்தொடர்பு சேவையை அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் வழங்கும் நோக்கத்தில் இந்த புதிய தொழில்நுட்பம் அமைய இருப்பதாகக் கூறினார்.