சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் கட்டப்படும் அயோத்தி ராமர் கோவில்.!

Scroll Down To Discover
Spread the love

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணியில், ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.

கோவில் கட்டுமானம் குறித்து, அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் கூறியதாவது. அயோத்தியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ராமர் கோவில் கட்டப்படும். கோவில் கட்டுமானம் பற்றி, 450 வரைபடங்களுக்கு மேல் வந்துள்ளன.இவற்றில் ஒன்றை தேர்வு செயவதற்கு, அறக்கட்டளையின் பொருளாளர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவில், 2.7 ஏக்கர் நிலத்தில் கட்டப்படும். மீதியுள்ள, 67 ஏக்கர் நிலத்தில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு விடுதிகள் உட்பட, பல வசதிகள் ஏற்படுத்தப்படும்.அயோத்தி நகரத்தை, சூரிய மின்சக்தி நகரமாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.