விஜய் மல்லையாவின் 14 கோடி மதிப்பிலான பிரான்ஸ் நாட்டில் உள்ள சொத்துக்கள் முடக்கம்.!

Scroll Down To Discover
Spread the love

பொதுத்துறை வங்கிகளில் கடன் ஏய்ப்பு புகாரில் சிக்கிய விஜய்மல்லையா தற்போது இங்கிலாந்து நாட்டில் வசித்து வருகிறார்.

இவர் மீதான புகாரை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை யினர் விசாரித்து வருகின்றனர். விஜய் மல்லையாவிற்கு வெளிநாடுகளில் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய்மல்லையாவிற்கு பிரான்ஸ் நாட்டில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. கடன் ஏய்ப்பு விவகாரத்தில் அமலாக்கத்துறை மேற்கண்ட சொத்துக்களை முடக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.