சிவகங்கையில் கொரானா தடுப்பு சிறப்பு பணி குறித்து தமிழக முதல்வர் ஆய்வு.!

Scroll Down To Discover
Spread the love

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கொரானா தடுப்பு சிறப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் இன்று ஆய்வு செய்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பேரூராட்சிகள் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 27.46 கோடி மதிப்பில் 30 திட்டப்பணி களுக்கு தமிழக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

பின்பு, 36.43 கோடி ரூபாய் மதிப்பில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை ,மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகளுக்கான கல்வெட்டைதிறந்து வைத்தார். மேலும், 29.33 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 7457 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.