கப்பல்களை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை இந்திய கடற்படையால் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.!

Scroll Down To Discover
Spread the love

கப்பல்களை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணை இந்திய கடற்படையால் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.

கடற்படையில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட பழைய கப்பல் ஒன்றின் மீது இந்த ஏவுகணை சோதிக்கப்பட்டது. கடும் விதிமுறைகளோடு ஏவப்பட்ட இந்த ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கியது.


இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ரஷ்யாவின் என் பி ஓ எம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணை, சவாலான போர்க்களங்களில் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் பெற்றது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த ஏவுகணை, இந்தியாவின் முப்படைகளிலும் இணைக்கப்பட்டுள்ளது.

2001-இல் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரம்மோஸ், இது வரை பல்வேறு சோதனைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. இன்றைய வெற்றிகரமான பரிசோதனைக்காக இந்திய கடற்படையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி பாராட்டினார்.