மதுரையில் எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்பு : மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

Scroll Down To Discover
Spread the love

உலக எய்ட்ஸ் தின உறுதி மொழி ஏற்பு மற்றும் கருத்தரங்கினை அரசு இராசாசி மருத்துவமனை கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டினார். மேலும் எய்ட்ஸ் விழிப்புணர்வு கண்காட்சியினை இராசாசி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் சங்குமணி, மற்றும் அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் பங்கேற்றனர்.