கார்த்திகை “தீப திருநாளை” விளக்குகளுடன் வரவேற்ற வில்லாபுரம் யோகாசன மாணவர்கள்.!

Scroll Down To Discover
Spread the love

திருப்பரங்குன்றம் அருகே உள்ள புறம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சகோதரர்கள் அசாருதீன் (வயது 14) சல்மான் (வயது 17). இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே யோகா பயிற்சி செய்து மத்திய, மாநிலங்கள் உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளனர்.

தற்போது கார்த்திகை தீபத் திருநாளை வரவேற்கும் விதமாக 22 மாணவர்களுடன் விளக்குகள் ஏற்றி உடம்பில் விளக்குகளுடன் பல்வேறு யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இது பற்றி அசாருதின் குறிப்பிடுகையில் யோகாசனம் உடலுக்கு நல்லது. நாம் அறியாமை எனும் இருளை அகற்றி உடல் நலம் பேண வெளிச்சம் பெற விளக்கை ஏற்றிட இது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி என கூறினார்