உதான் திட்டத்தின் கீழ் ஐதராபாத் – நாசிக் இடையே ஸ்பைஸ் ஜெட் விமான சேவை தொடக்கம்.!

Scroll Down To Discover
Spread the love

உதான் திட்டத்தின் கீழ் ஐதராபாத்-நாசிக் இடையே இரண்டாவது நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது.

உதான் திட்டத்தின் கீழ் சிறு நகரங்களில் விமான சேவைகள் விரிவு படுத்தப்பட்டு வருகின்றன. நாசிக் விமான நிலையத்தில் இந்த விமான சேவையை எச்ஏஎல் விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரி சேஷாகிரி ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விமான போக்குவரத்து துறை மற்றும் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

உதான் திட்டத்தின் கீழ், இது வரை 53 விமான நிலையங்களில் இருந்து 297 வழித்தடத்தில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.ஐதராபாத் – நாசிக் வழித்தடத்தில் அலையன்ஸ் ஏர் விமானம் ஏற்கனவே சேவையை தொடங்கியுள்ளது.

தற்போது இரண்டாவதாக இந்த வழித்தடத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமான சேவையை தொடங்கியுள்ளது. 78 இருக்கைகள் கொண்ட க்யூ400- ரக விமானத்தை, இந்த வழித்தடத்தில் வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு நாட்களில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இயக்குகிறது. உதான் திட்டத்தின் கீழ், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தால் இணைக்கப்படும் 14-வது இடம் நாசிக் என்பது குறிப்பிடத்தக்கது.