சிறு வயதில் இந்து மத புராணங்களான ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன் : அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா..!

Scroll Down To Discover
Spread the love

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 25 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர்களில் பெரும்பாலானோர் ஒபாமாவின் ரசிகர்களாக உள்ளனர்.

தற்போது ஒபாமா இந்தியா கால நினைவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளார். சிறுவயதில் தான் இந்தோனேசியாவில் தனது பாட்டியுடன் வசித்தபோது இந்து மத புராணங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை கேட்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பல கலாச்சார கூறுகள் உள்ளதாகவும் 700க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாகவும் ஒபாமா பெருமிதம் தெரிவித்துள்ளார். ‘ஏ பிராமிஸ்டு லேண்ட்’ என்ற இந்தியாவுடனான தனது உறவை விவரிக்கும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். 2010ம் ஆண்டுதான் தான் முதல் முறையாக இந்தியாவுக்கு வந்ததாகவும் ஆனால் தனது பால்ய கால நினைவுகள் இந்தியாவுடன் தன்னை பல காலமாக கட்டிப்போட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.