ராணுவ பீரங்கி வாகனத்தில் பிரதமர் மோடி.!

Scroll Down To Discover
Spread the love

ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி பண்டிகையை, ராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டாடும் பிரதமர் மோடி, இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ராணுவ முகாமிற்கு சென்று கொண்டாடினார்.


அப்போது வீரர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி பேசும்போது- நமது நாட்டின் மீது தீய நோக்கத்துடன் கண் வைப்பவர்களுக்கு நமது ராணுவம் உரிய பதிலடி கொடுக்கும். இதன் மூலம், நமது ராணுவத்தின் பெருமை அதிகரித்துள்ளது.மற்ற பெரிய நாடுகளுடன் இணைந்து நமது ராணுவமும் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக போராட இந்தியா உறுதிபூண்டுள்ளது.


பயங்கரவாதிகளை எந்த நேரமும் எந்த இடத்திலும் தாக்க தயாராக உள்ளோம் என்பதை இந்திய ராணுவம் வெளிப்படுத்தியுள்ளது.எதிரிகளை எதிர்க்கும் நேரத்திலும், பேரிடரில் சிக்கும் நமது மக்களை காக்கும் பணியிலும் நமது வீரர்கள் முன்னின்று பணியாற்றுகின்றனர்.


கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் சிக்கி தவித்த நமது மக்களை மீட்ட விமானப்படை மற்றும் கடற்படை வீரர்களின் செயல் பாராட்டுதலுக்குரியது. கொரோனா காலத்தில், துரிதமாக செயல்பட்டு, மாஸ்க், பிபிஇ கிடகள், மருத்துவ சாதனங்கள் கிடைப்பதை இந்திய ஆயுதப்படைகள் உறுதி செய்தன எனக்கூறினார். தொடர்ந்து, ராணுவ சீருடையில் இருந்த பிரதமர் மோடி., எல்லை பகுதியில் உள்ள சாலையில் ராணுவ டாங்கில் பயணம் செய்தார்.