தொழில்நுட்ப கோளாறு சுங்கச்சாவடியில் 2 கிலோமீட்டருக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் சுமார் பெங்களூர் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வழக்கம்போல சென்று கொண்டிருந்தது.

திடீரென, கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுங்கக் கட்டணம் வசூல் செய்வது மற்றும் பாஸ்ட் ட்ராக் வேலை செய்யாமல் போனது .
இதனால் ,வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டருக்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றது .சம்பவம் குறித்து தகவலறிந்த திருமங்கலம் காவல் துறையினர் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மற்ற வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு கணினி சரி செய்யும் வரை மாற்றுப்பாதையில் அனுப்பிவைத்தனர் .இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டது .சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு கணினி பழுது பழுது சரியானதால், வழக்கம் போல் சுங்கக் கட்டணம் செலுத்தி வாகனம் சென்றது .