இஃப்கோ பொருட்களை ஆன்லைனில் விற்க “எஸ்பிஐ யுனோ கிரிஷி” செயலி உடன் ஒப்பந்தம்

Scroll Down To Discover
Spread the love

இஃப்கோ நிறுவனத்தின் மின் வணிக தளமான www.iffcobazar.in, பாரத ஸ்டேட் வங்கியின் யுனோ கிரிஷியுடன் இணைந்து பொருட்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது பேசிய இஃப்கோ நிர்வாக இயக்குநர் டாக்டர் யு எஸ் அவாஸ்தி, இஃப்கோ, எஸ்பிஐ ஆகிய இரண்டும் இந்தியாவின் மிகப் பழமையான வணிக அமைப்புகள் என்றார். இரண்டு பெயர்களிலும் உள்ள ஆங்கில எழுத்தான ‘ஐ’ இந்தியாவைக் குறிக்கிறது. வார்த்தையாலும், ஆத்மாவாவலும் நாம் பிணைக்கப்பட்டிருக்கின்றோம் என்று கூறிய அவர், இரண்டு பெருமை மிக்க இந்திய அமைப்புகள் இதுபோன்று இணைவதால் பரஸ்பர ஒத்துழைப்பின் வாயிலாக, இந்திய விவசாயிகளின் முன்னேற்றத்தை முன்னெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இஃப்கோ நிறுவனம் தனது பொருட்களை விற்பனை செய்வதற்காக www.iffcobazar.in, என்ற மின்-வணிக இணையதளத்தை நடத்தி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய உர உற்பத்தி நிறுவனமாக இஃப்கோ திகழ்கிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் 26 மாநிலங்களில் 1200-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன. இந்த நிறுவனத்தின் மின்-வணிகதளம் 12 இந்திய மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் உரங்கள், இயற்கை இடுபொருட்கள், விதைகள், பூச்சிமருந்துகள், விவசாய கருவிகள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் இந்தியா முழுவதும் கூடுதல் கட்டணம் ஏதும் இன்றி விவசாயிகளின் வீடுகளுக்கே பொருட்களை இந்நிறுவனம் டெலிவரி செய்கிறது.