பேராவூரணி பேரூராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி.!

Scroll Down To Discover
Spread the love

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ், தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி பேராவூரணி பேரூராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி முதன்மைச் சாலை வழியாக பேராவூரணி அண்ணா சிலை வரை சென்று வந்தடைந்தது.

பேரணியில், பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன்,இளநிலை உதவியாளர்கள் ராஜேந்திரன் மற்றும் ராஜேஷ், சார்லஸ், வீரமணி ,அலுவலக பணியாளர்கள்,அரசு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.