திருமாவளவன் போன்று பெண்களை இழிவாக பேசுபவர்கள் தேசவிரோதிகள் : ஜீயர் பேட்டி

Scroll Down To Discover
Spread the love

திருமாவளவன் போன்று பெண்களை இழிவாக பேசுபவர்கள் தேசவிரோதிகள் என ஜீயர் பேட்டி அளித்துள்ளர். ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் செய்தியாளர் சந்தித்த போது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெண்களைப் பற்றி இழிவாக மனு சாஸ்திரத்தில் கூறியிருப்பதாக திருமாவளவன் தெரிவித்ததாகவும் அந்தமாதிரி எவ்வித கருத்தும் மனு சாஸ்திரத்தில் இல்லை என்றும் ஆகையால் பெண்களைப் பற்றி தவறாக பேசிய திருமாவளவனுக்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதாகவும் உடனடியாக தமிழக அரசு அவரை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் தமிழகம் முழுவதிலுமிருந்து துறவிகள் ,பெண்கள் மற்றும் இந்து மக்களை திரட்டி ரோட்டில் இறங்கி போராட போவதாக தெரிவித்தார்.

மேலும் இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் திருமாவளவனை எந்த கூட்டணியில் சேர்க்க கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இந்து சமுதாய விரோதிகளுக்கு மக்கள் ஓட்டு போடக்கூடாது எனவும் தெரிவித்தார்.